அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்குமிடையில் கருத்து வேற்றுமை
2021-06-18 19:05:49

அமெரிக்க அரசுத் தலைவர் பைடன், ஐரோப்பியப் பயணத்தின் போது, ஜி 7 நாடுகள் குழுவின் உச்சிமாநாடு, நேட்டோ உச்சிமாநாடு, அமெரிக்க-ஐரோப்பிய உச்சிமாநாடு ஆகியவற்றின் மூலம், மதிப்புகளின் முரண்பாட்டின் அடிப்படையில் ஒரு கூட்டணியை உருவாக்க முயன்றார். ஆனால் ஜெர்மனி தலைமை அமைச்சர் மேர்கல் கூறுகையில், சீனாவுடன் கருத்து வேற்றுமை கொண்டிருந்தாலும் ஜி 7 அமைப்பு, சீனாவுடன் ஒத்துழைப்பை நடத்த விரும்புகிறது என்று தெரிவித்தார். பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரான் கூறுகையில், ஜி 7 குழு, சீனாவுக்கு எதிரான கூட்டணி அல்ல. உலகின் காலநிலை மாற்றச் சமாளிப்பு, சர்வதேச வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஜி 7 அமைப்பு, தொடர்ந்து சீனாவுடன் ஒத்துழைக்க வேண்டுமென தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் மீது ஐரோப்பா கொண்டிருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது. இரு தரப்புக்குமிடையில் கருத்து வேற்றுமையும் முரண்பாடும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.