© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
படம் : CFP
பெய்ஜிங்கில் 21ஆம் நாள் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், சமீபத்தில் வெளிவந்துள்ள ஹைனான் தாராள வர்த்தகத் துறைமுகச் சட்டம் குறித்து சீன அரசின் பலத் துறை அதிகாரிகள் விரிவாக விளக்கிக்கூறினர். திறப்பு நிலையை விரிவாக்குவதிலும் பொருளாதார உலகமயமாக்கலை முன்னெடுப்பதிலும் சீனா நிலைத்து நிற்பதற்குரிய தெளிவான அறிகுறி ஒன்று இக்கூட்டத்தில் இருந்து வெளிப்பட்டது.
கடந்த ஆண்டின் ஜுன் முதல் நாள், ஹைனான் தாராள வர்த்தகத் துறைமுகக் கட்டுமானம் பற்றிய பொதுவான திட்டவரைவு வெளியாகி, தாராள வர்த்தகத் துறைமுகத்தின் ஆக்கப்பணி பன்முகங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 56 கோடி அமெரிக்க டாலராகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தாராளமயமாக்கல் மற்றும் எளிதாக்குதல் ஆகியவை, ஹைனான் தாராள வர்த்தகத் துறைமுகக் கட்டுமானத்தில் முக்கியப் பகுதிகளாகும். ஹைனான் தாராள வர்த்தகத் துறைமுகச் சட்டத்தில் இதற்கான சிறப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சட்டப்படி ஆட்சி புரிவது என்பது, தொழில் நடத்துவதற்கான மிக சிறந்த சாதகமான சூழலை உருவாக்குவதாகும். இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது, ஹைனான் தாராள வர்த்தகத் துறைமுகச் சட்டமானது, மேலும் ஈர்ப்புமிக்க வணிக சூழலை உருவாக்குவற்குரியதாக அமையும். தொழில் நிறுவனங்கள் குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு நீண்டகாலமாக இயங்குவதற்குரிய உகந்த மனவுறுதியும் நம்பிக்கையும் மேம்படுத்தப்படும்.
திட்டப்படி, ஹைனான் தாராள வர்த்தகத் துறைமுகத்தின் வணிகச் சூழல் 2025ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டின் முதல்தர நிலையை எட்டும். 2035ஆம் ஆண்டில் சீனாவின் திறந்த ரகப் பொருளாதாரத்தின் புதிய முன்மாதிரியாகவும் மாறும். சீனாவின் திறந்த கதவு எப்போதும் மூடப்படாது. மாறாக, திறந்த நிலை மேலும் விரிவாகும். உலகம் இதில் இருந்து மேலதிக வாய்ப்புகளைப் பெறும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.