வடிகட்டாத அணுக் கழிவு நீரைக் கடலுக்கு வெளியேற்ற முடியுமா?!
2021-06-22 15:53:57

ஃபுகுஷிமா அணு உலையின் கழிவு நீரை கடலுக்கு வெளியேற்றும் திட்டத்தை அறிவித்துள்ள ஜப்பான் அரசு, இந்த நடவடிக்கை பாதுகாப்பானது நம்பகமானது என்று பலமுறை வலியுறுத்தி வருகின்றது.

அதேவேளையில், 20ஆம் நாள் வெளியான ஒரு செய்தி மக்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. என்எச்கே வெளியிட்ட செய்தியின்படி, ஃபுகுஷிமா கழிவு நீரை வடிகட்டும் தொழில் நுட்பத்தை டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் சமூகத்தில் வெளிப்படையாகவும் பரந்த அளவிலும் சேகரித்து வருகின்றது. அணுக் கூறுகளை வடிகட்டும் தொழில் நுட்பம் இல்லாத நிலையில், அணுக் கழிவுநீரைக் கடலுக்கு வெளியேற்றுவது பாதுகாப்பானது என்று ஜப்பான் கூறுவதை எப்படி நம்ப முடியும்? என்னும் கேள்வி எழுகின்றது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், உலக மக்களின் உடல் நலம் மற்றும் உலக உயிரின வாழ்க்கை உறுதியாகப் பாதிக்கப்படும் என்பதோடு மனித குலத்தின் நேர்மை மற்றும் மனசாட்சிக்கும் அறைகூவல் விடுக்கப்படும்.