பழங்குடியினர் மீதான கனடாவின் குற்றங்களைப் விசாரணை செய்ய வேண்டும்
2021-06-23 21:12:34

ஜுன் 22ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 47ஆவது கூட்டத் தொடரில், ரஷியா, பெலாரஸ், வட கொரியா, ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் சார்பில் சீனப் பிரதிநிதி கனடாவின் மனித உரிமைப் பிரச்சினை குறித்து கூட்டுரை ஒன்றை வழங்கினார். அப்போது மனித உரிமையை மீறும் செயலைக் கனடா உடனடியாக நிறுத்த வேண்டுமென இக்கூட்டுரையில் கோரப்பட்டுள்ளது.

வரலாற்றில் பழங்குடியின மக்கள் மீது நிலத்தைக் கைப்பற்றுதல், உயிரைக் கொல்லுதல், பண்பாட்டை ஒழித்தல் உள்ளிட்ட பல குற்றங்களை கனடா செய்துள்ளது. ஆனால், கடனா தனது இச்செயல்களைப் பொருட்படுத்தாமல், அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகளுடன் இணைந்து சீனா மீது அவதூறு பரப்பி வருகிறது என்று அந்தக் கூட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, 2007ஆம் ஆண்டில் பழங்குடியினர் உரிமை பற்றிய அறிக்கையை ஐ.நா. பேரவை நிறைவேற்றிய போது, அறிக்கைக்கு ஆதரவாகப் பெரும்பாலான நாடுகள் ஒப்புதல் வாக்களித்தன. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட  சில நாடுகளுடன் இணைந்து கடனா அத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. அதன்பின், 2016ஆம் ஆண்டு வரை கனடா எதிர் நிலைப்பாட்டை திரும்பப் பெற்றது.

வரலாறு முதல் உண்மை வரை, கனடா மனித உரிமைப் பிரச்சினையில் நிறைய குற்றங்களைச் செய்துள்ளது. இந்நிலையில், மனித உரிமைக்கான முன்மாதிரி நாடு என்னும் பெயரில் பிற நாடுகளை குற்றஞ்சாட்டும் தகுநிலை கனடாவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.