மூன்று வேண்டுகோள்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அமெரிக்கா
2021-06-23 18:31:32

கோவிட்-19 தொடர்பாக மேலதிகமாகக் கண்டறியப்பட்டுள்ள உண்மைகளைப் பொருட்படுத்தாமல்,  சீன எதிர்ப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் இன்னும் கூட கோவிட்-19 தொற்று நோயின் தோற்றம் என்ற பெயரில் பொய்களைப் பரப்பி வருகின்றனர். சமீபத்தில், அமெரிக்க அரசுத் தலைவரின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் பேட்டியளிக்கையில், கோவிட்-19 தொற்று நோயின் தோற்றம் குறித்து மேலதிகமாக விசாரணை மேற்கொள்ளாமல், சீனா சர்வதேச சமூகத்தின் மத்தியில் தனிமைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

இதனிடையில், அமெரிக்காவில் முதன்முதலாகத் தொற்று நோய் எப்போது தோன்றியது? அமெரிக்காவின் தொற்று நோய் தடுப்பில் திறமையின்மைக்கு காரணமானவர்களும் பொறுப்புடையவர்களும் யார்? ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகம் மற்றும் வெளிநாடுகளிலுள்ள அமெரிக்காவின் 200க்கும் மேலான உயிரின ஆய்வகங்கள் ஆகியவற்றில் முழுமையான விசாரணை மேற்கொள்ளல் என்னும் மூன்று கேள்விகளுக்கு அமெரிக்கா பதிலளிக்க வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது, மேலதிக ஆய்வுகளின் முடிவின் படி, வைரஸ் பரவல் தொடங்கிய நேரம் தொடர்ந்து மேலும் முன்னோக்கிச் சென்றுள்ளது. கோவிட்–19 உலகின் பல இடங்களிலும் பரவியுள்ளது என்பது உண்மையே. இந்நிலையில் அதன் தோற்றம் பற்றிய ஆய்வுப் பணி, உலகளாவிய ஒத்துழைப்புடன் பல இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமானது.

கூடுதலாக, அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகம் 2019ஆம் ஆண்டு ஜுலை திங்கள் திடீரென மூடப்பட்டது ஏன்? என்பது குறித்தும்,  கிட்டத்தட்ட அதே காலத்தில், வர்ஜீனியா மாநிலத்தின் வடபகுதியில் காரணம் தெரியாத சுவாச நோய் ஏற்பட்டதன் காரணம் என்ன? என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதோடு, விஸ்கான்சின் மாநிலத்தில் மின் சிகரெட் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கோவிட்-19 நோயாளிகளின் அறிகுறிகளிடையே மிகுந்த அதிக ஒற்றுமைகள் காணப்பட்டதன் ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு தற்போது வரை அமெரிக்க அரசு எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை.

இந்த விடயங்களில் உண்மைக்கு மாறாக மறைமுகமாகவும் வெளிப்படையற்ற நிலையிலும் செயல்பட்டு வரும் அமெரிக்கா, விஞ்ஞானிகள் வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கு தடையையும் ஏற்படுத்தி வருகின்றது. நோய் தடுப்புக்காகச் சர்வதேச ஒத்துழைப்பை சீர்குலைத்து, பொறுப்புகளைத் தட்டிக் கழித்து வரும் அமெரிக்கா தற்போது, சீனா கேட்டுள்ள மூன்று வேண்டுகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.