பத்திரிகை சுதந்திரத்தைப் பயன்படுத்தி சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் மேலை நாட்டு சக்தி
2021-06-25 15:38:11

பத்திரிகை சுதந்திரத்தைப் பயன்படுத்தி சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் மேலை நாட்டு சக்தி_fororder_rBABCmDVWN6AIq69AAAAAAAAAAA377.2048x1153.1000x563

ஹாங்காங்கின் "ஆப்பிள் நாளேடு" அதன் பத்திரிகை மற்றும் வலைத்தளச் செயல்பாடுகளை நிறுத்துவதாக அண்மையில் அறிவித்தது. அதனையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் சில அரசியல்வாதிகள், சீனா "பத்திரிகை சுதந்திரத்தை உடைத்துள்ளது" என வெளிப்படையாக அவதூறாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இது, சர்வதேசச் சட்டத்தையும் சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாட்டையும் கடுமையாக மீறி சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடும் செயலாகும்.

"ஆப்பிள் நாளேடு" பிரச்சினைக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்நிறுவனம் ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிச் செயல்பட்ட ஒன்று. இந்நிலையில், "பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரம்", தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருந்தால் அதனை உலகில் எந்த நாடு தான் அனுமதிக்கும்? என்று "பத்திரிகை சுதந்திரம்" பற்றி பேசும் அமெரிக்க மற்றும் மேற்குலக அரசியல்வாதிகளை நோக்கி மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.