மால்வினாஸ் தீவுகளின் இறையாண்மையைக் கோரும் அர்ஜென்டினாவின் கோரிக்கைக்கு ஆதரவு
2021-06-25 20:11:11

மால்வினாஸ் தீவுகளின் இறையாண்மையைக் கோரும் அர்ஜென்டீனாவின் கோரிக்கையை உறுதியாக ஆதரிப்பதாக சீன தூதாண்மை அதிகாரி கெங் ஷுங் 24ஆம் நாள் தெரிவித்துள்ளார். அன்று நடைபெற்ற ஐ.நா. காலனித்துவ நீக்கத்துக்கான சிறப்புக் குழுக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதியான அவர் பேசுகையில், அர்ஜென்டினாவின் கோரிக்கைக்கு முனைப்புடன் பதில் அளிக்க வேண்டிய பிரிட்டன், வெகுவிரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்கி ஐ.நா.வின் தீர்மானத்தின் படி, அமைதியான  நியாயமான மற்றும் நிலையான தீர்வினைக் காண வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மால்வினாஸ் தீவுகள் பிரச்சினையின் சாராம்சம், காலனித்துவத்தால் ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிக்கல் என்பது குறிப்பிடத்தக்கது. மால்வினாஸ் தீவுகள் போருக்குப் பிறகு, அர்ஜென்டீனா இந்த தீவுகளின் இறையாண்மை உரிமையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றது.  இதன் பொருட்டு பிரிட்டன் அரசாங்கம், அர்ஜென்டினா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா. காலனித்துவ நீக்கத்துக்கான சிறப்புக்குழு பலமுறை வேண்டுகோளும் விடுத்துள்ளது. ஆனால், ஐ.நா.வின் கோரிக்கையைப் பிரிட்டன் மறுத்துள்ளது.  பிரிட்டன் தரப்பு இன்னும் காலனித்துவ ஆட்சியின் பழைய கனவில் மூழ்கியிருப்பதை இது வெளிக்காட்டுகிறது. தற்போது வரை, காலனித்துவ ஆட்சியின் போது நடைபெற்ற குற்றங்களை, பிரிட்டன் ஆட்சியாளர்கள் மதிப்பாய்வு செய்யவில்லை. தற்போது எந்த விதமான காலனித்துவத்தையும் முடிவுக்கு கொண்ட வர வேண்டியது அவசியமானது. அதன் அடிப்படையில், மால்வினாஸ் தீவுகளின் மீதான அர்ஜென்டினாவின் உரிமைக் கோரிக்கையை ஆதரிப்பதென்பது காலனித்துவ எதிர்ப்பபின் இன்றியமையாத நடவடிக்கையாகும். சர்வதேச சமூகம் ஒற்றுமையுடன் செயல்பட்டு,  மால்வினாஸ் தீவுகள் உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் இல்லாத 17 பிரதேசங்களுக்கான ஐ.நா.  காலனித்துவ நீக்கப் போக்கினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.