உயிராற்றல் மிக்க சீனாவின் புதிய ரக அரசியல் கட்சி அமைப்பு முறை
2021-06-25 20:51:57

சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனாவின் புதிய ரக அரசியல் கட்சி அமைப்பு முறை எனும் வெள்ளையறிக்கையை சீனா 25ஆம் நாள் வெளியிட்டது. இந்த வெள்ளையறிக்கை மூலம், உலகம், சீனாவின் அரசியல் கட்சி அமைப்பு முறையையும் அரசியல் அமைப்பு முறையையும் பன்முகங்களிலும் அறிந்து கொள்ள முடியும்.

மேற்குலக நாடுகளில் பொதுவாக நடைமுறையில் உள்ள பல கட்சி அமைப்பு முறையை விட, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பல கட்சிகளின் ஒத்துழைப்பு மற்றும் அரசியல் கலந்தாய்வு அமைப்பு முறையைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இவ்வமைப்பு முறை சீனாவின் பாரம்பரிய பண்பாடு, வரலாறு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரக அரசியல் கட்சி அமைப்பு முறையாகும்.

70க்கும் மேலான ஆண்டுகளின் வளர்ச்சியுடன், இந்த அமைப்பு முறை சீனாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் தனிச்சிறப்புமிக்க சாதகங்களையும் வலுவான உயிராற்றலையும் வெளிக்காட்டியுள்ளது. சீனாவின் நிர்வாக அமைப்பு முறை மற்றும் நிர்வாகத் திறனின் நவீனமயமாக்கத்தைப் பெரிதும் முன்னேற்றுவித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்குப் பொருந்திய பொதுவான அரசியல் கட்சி அமைப்பு முறை என்பது இந்த உலகில் இல்லாத ஒன்றாகும். சொந்த நாட்டின் நிலைமைக்கேற்ப, நிர்வாகத்திறனை வெளிக்கொணரும் அமைப்பு முறை தான் சிறந்த அரசியல் கட்சி அமைப்பு முறையாகுமென சீனா நிரூபித்துள்ளது.