ஜப்பான் உலகக் கோட்பாடுகளை மதிக்க வேண்டும்
2021-06-26 20:09:08

25ஆம் நாள் கடல் சட்டம் தொடர்பான ஐ.நா பொது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட  நாடுகளின் 31ஆவது கூட்டத்தில் ஃபுகுஷிமா அணு உலையின் கழிவு நீரைக் கடலுக்கு வெளியேற்றும் பிரச்சினை குறித்து, ஜப்பான் தொடர்ந்து பொய்களைப் பரப்பியது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீனப் பிரதிநிதி, ஜப்பான் கூறியது போல், அணு உலையின் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரால் பாதிப்பில்லையெனில், ஜப்பான் அதைப் பயன்படுத்தாமல் ஏன் கடலில் வெளியேற்ற வேண்டும்?என்று கேள்வி எழுப்பினார். சீனப் பிரதிநிதியின் இக்கேள்வி சீனாவின் கேள்வி மட்டுமல்ல சர்வதேச சமூகத்தின் பொதுவான கேள்வியாகும்.

ஃபுகுஷிமா கழிவு நீரை வடிகட்டும் தொழில் நுட்பத்தை டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் சமூகத்தில் வெளிப்படையாகவும் பரந்த அளவிலும் சேகரித்து வருகின்றது. அணுக் கூறுகளை வடிகட்டும் தொழில் நுட்பம் இல்லாத நிலையில், அணுக் கழிவுநீரைக் கடலுக்கு வெளியேற்றுவது பாதுகாப்பானது எனக் கூறுவது பயங்கரமான விஷயமாகும். அதோடு, ஃபுகுஷிமா அணு உலையின் கழிவு நீர் அகற்றும் பிரச்சினை என்பது ஜப்பானின் சொந்தப் பிரச்சினை மட்டுமல்ல. எனவே, ஜப்பான் உலகக் கோட்பாடுகளை மதித்து, ஃபுகுஷிமா அணு உலையின் கழிவு நீரைக் கடலுக்கு வெளியேற்றும் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.