அமெரிக்க மனித உரிமை பிரச்சினை
2021-06-27 20:22:08

ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்டைக் கொன்ற வெள்ளை அமெரிக்க காவற்துறையினரான டெரிக் சாவினுக்கான தண்டனை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், ஃபிளாய்டின் குடும்பமும் இனப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து அமெரிக்கர்களும் மீண்டும் காயமடைந்துள்ளனர். இவ்வழக்கில் சாவினுக்கு 22 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்கக் காவற்துறை சட்ட அமலாக்க வரலாற்றில் முக்கியமான நேரமாகும். ஆனால், இதனால் பல அமெரிக்கர்கள் திருப்தி அடையவில்லை. சாவின் இதுவரை ஃபிளாய்ட் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை. அத்துடன், அமெரிக்காவில் காணப்படும் முறையான இனப் பாகுபாடு என்பது ஒரு வழக்கினால் மட்டுமே மாறிவிடாது.

2020ஆம் ஆண்டில், அமெரிக்காவில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட 1126 பேரில், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விகிதம் 28 விழுக்காடாகும். அமெரிக்க மக்கள் தொகையில் அவர்கள் வகிக்கும் 13 விழுக்காட்டை விட இது மிக அதிகம். சாவின்றுக்கான தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாளிலும், காவல்துறையினர்கள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

அமெரிக்காவில் இனவெறி தற்போது வரை விரிவாக, முறையாக மற்றும் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. செல்வங்களின் பங்கீடு, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, அரசியல் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்க சிறுபான்மையினரின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

இதனிடையில், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 47ஆவது கூட்டத் தொடரில், 90க்கும் அதிகமான நாடுகள் பல்வேறு வழிகளில் சீனாவுக்கு ஆதரவு அளித்ததோடு, மனித உரிமைகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதற்கும் இரட்டை வரையறைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.