சாதாரண நபரும் வீரருமான கட்சி உறுப்பினர்களின் செயல்கள் வெற்றிக்கு காரணம்
2021-06-29 21:13:13

சாதாரண நபரும் வீரருமான கட்சி உறுப்பினர்களின் செயல்கள் வெற்றிக்கு காரணம்_fororder_1127611409_1625018097216_title0h

ஜுலை-1 பதக்கம் பெற்றவர்கள் அனைவரும் பொது மக்களுள் வந்து, சொந்தப் பொறுப்பில் நிலைத்து நின்று, தன்னலமின்றி அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்கள் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் தலைசிறந்த கட்சி உறுப்பினர்களுக்கு பதக்கம் வழங்கும் விழாவில் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சநிலை கௌரவமான ஜுலை-1 பதக்கம் இவ்வாண்டு வழங்கப்படுவது முதன்முறை. 29 கட்சி உறுப்பினர்கள் இப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர். நம்பிக்கையை உறுதிப்படுத்துவது, கோட்பாட்டைச் செயல்படுத்துவது, அர்ப்பணிப்புடன் போராடுவது, ஊழலற்ற முறையிலும் நேர்மையாகவும் பணிபுரிவது ஆகியவை கொண்ட கட்சி உறுப்பினர்களின் பொது எழுச்சியை வேறுபட்ட துறைகளைச் சேர்ந்து பல்வேறு வயதிலான அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆற்றைக் கடக்கும் போரில் பெரும் பங்காற்றிய மா மாவ்ஜியே, கிராமவாசிகளுக்குத் தலைமை தாங்கி செங்குதான பாறையை வெட்டி கால்வாயை அமைத்த ஹுவா டாஃபா, 80 வயதுக்கு மேல் இருந்தாலும் இதயமுடுக்கியுடன் பீடபூமியில் அரசியல் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற வூ தியன்யீ, வறுமை ஒழிப்புக்கு தன் உயிரையும் பலிகொடுத்த ஹுவாங் வென்சியூ முதலியோரின் கதைகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பும், கட்சி உறுப்பினர்கள் 100 ஆண்டுகால போராட்டத்தில் உருவான எழுச்சியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் பெண் குழந்தைகளுக்கான முதலாவது இலவச உயர்நிலைப் பள்ளியை நிறுவிய ட்சாங் குய்மென், ஜுலை-1 பதக்கம் பெற்ற பிறகு கூறுகையில், கட்சி உறுப்பினர்கள் நாள்தோறும் செய்யும் விஷயங்களைச் செய்கின்றோம் என்று தெரிவித்தார். ஒவ்வொருவரும் சாதாரண பணியிடத்தில் அசாதாரண சாதனைகளைப் பெற முடியும் என்பதை இது காட்டுகிறது. எண்ணற்ற வீரஞ்செறிந்த சாதாரண மக்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெறச் செய்யும் ஆற்றலாகவும், உலகின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தூண்டும் ஆற்றலாகவும் திகழ்கின்றனர்.