© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் 28ஆம் நாள் பிற்பகல் காணொளி வழியில் பேச்சுவார்த்தை நடத்தி,கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், இருநாட்டுத் தலைவர்களும் "சீன-ரஷியாவின் சுமூகமான நட்பார்ந்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை" அதிகாரப்பூர்வமாக நீட்டிப்பதாகத் தெரிவித்தனர். இது, புதிய காலத்தில் சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக்கான கூட்டாளி உறவின் வலிமையான உயிர்ச்சக்தியைக் காட்டுகின்றது. அதோடு, உலகப் பாதுகாப்பையும் நிதானத்தையும் பேணிகாக்க நேர்மறை ஆற்றலையும் ஊட்டுகின்றது.
கடந்த 20 ஆண்டுகளில் சீன-ரஷிய ஒத்துழைப்பு, எப்போதும் அணிசேரா, மோதலற்ற மற்றும் மூன்றாம் தரப்பினரை குறிவைக்காத நிலைப்பாட்டில் ஊன்றி நின்று, உலகின் பெரிய நாடுகள் பழகுவதற்கான புதிய வழியில் நுழைந்துள்ளன. இந்த ஒத்துழைப்பு இரு நாட்டுக் கூட்டு நலன்களைப் பேணிகாப்பதோடு மட்டுமல்லாமல், உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
பயனுள்ள ஒத்துழைப்பு என்பது சீன-ரஷிய உறவின் சிறப்பாகும். ஜூன் 28ஆம் நாள் கையொப்பமிட்டுள்ள கூட்டறிக்கையில் சீனாவும் ரஷியாவும் பல ஒத்துழைப்புக் கடமைகளை உறுதிப்படுத்தியுள்ளன. இவை, இரு நாட்டு நலன்களுக்குப் பொருந்தியிருப்பதோடு உலகத்தின் பரஸ்பரத் தொடர்புக்கும் துணை புரியும். மனித குல வளர்ச்சி பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், சீன-ரஷிய நெடுநோக்கு ஒத்துழைப்பு நெருக்கமாக இருப்பதால், உலகத்தின் பாதுகாப்புக்கும் நிதானத்திற்கும் மேலும் உத்தரவாதம் அளிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.