சீனாவில் மலேரியா தடுப்புப் பணியில் மாபெரும் சாதனை
2021-06-30 20:32:13

மலேரியா இல்லா நாடு தரச்சான்றைச் சீனா அதிகாரப்பூர்வமாகப் பெற்றது என்று உலகச் சுகாதார அமைப்பு ஜுன் 30ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் சாதனையாகும் என்றும் இவ்வமைப்பு தெரிவித்தது. உலகச் சுகாதார அமைப்பைச் சேர்ந்த மேற்கு பசிபிக் பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இத்தரச்சான்றைப் பெற்ற முதல் நாடாகச் சீனா திகழ்கிறது.

சீனாவில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த நூற்றாண்டின் 40ஆம் ஆண்டுகளில் இருந்த 3 கோடியிலிருந்து 2017ஆம் ஆண்டில் பூஜியமாக குறைந்தது. கடந்த பல ஆண்டுகளாக சீனாவில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் சாதனை இதுவாகும். அத்துடன், சீனாவின் ஆளும் கட்சி மனிதர்களே முதன்மை என்ற கொள்கையில் ஊன்றி நின்று, மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தை முதலாவது இடத்தில் வைத்துள்ளதன் காரணமாக பெறப்பட்டுள்ள சாதனை இதுவாகும்.

மக்களின் உடல் நலத்தைப் பேணிக்காக்கும் வகையில், கடந்த நூற்றாண்டின் 50ஆம் ஆண்டுகளில் சீனாவில் மலேரியா தடுப்புப் பணி துவங்கப்பட்டது. அதையடுத்து, சீனாவில் வறுமை ஒழிப்புப் பணியின் முன்னேற்றத்துடன், பொது மக்களின் உறைவிடம், வாழ்க்கைத் தரம், தொலைத்தொடர்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெருமளவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது மலேரியா ஒழிப்புக்குப் பெரும் பங்காற்றியுள்ளது.

மேலும், சீனாவில் மலேரியா ஒழிப்பு, சுகாதார நிலையின் உயர்வை வெளிப்படுத்துவதோடு, மனித உரிமை பணியின் முன்னேற்றைத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது. மனித உடல் நலம் மற்றும் உலக மனித உரிமைக்கான முன்னேற்றத்துக்குச் சீனா மாபெரும் பங்காற்றியுள்ளது.