சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீனத் தேசத்தின் மறுமலர்ச்சி
2021-07-01 19:16:43

ஜுலை 1ஆம் தேதி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட மாநாடு பெய்ஜிங் தியன்ஆன்மென் சதுக்கத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் கூறுகையில், முதலாவது நூற்றாண்டு இலக்கை நனவாக்கி, சீனத் தேசத்தின் மண்ணில் ஓரளவு வசதி படைத்த சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டி முடித்து, தீவிரமான வறுமை பிரச்சினையைத் தீர்த்து, சோஷலிச நவீன வல்லரசை உருவாக்கும் 2ஆவது நூற்றாண்டு இலக்கை நோக்கி பேரூக்கத்துடன் முன்னேறி வருகிறோம் என்று தெரிவித்தார்.

ஓரளவு வசதி படைத்த சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பது, சீன மக்களுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த வாக்குறுதியாகவும், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி என்ற சீனக் கனவை நனவாக்கும் முக்கிய கட்டமாகவும் திகழ்கின்றது.

58 உறுப்பினர்களுடன் தொடங்கி தற்போது 9 கோடியே 50 லட்சத்துக்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்டு உலகில் முதலாவது பெரிய கட்சியாக மாறிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீன மக்களுக்கு நன்மை புரிந்து, சீனத் தேசத்தின் மறுமலர்ச்சியை இடைவிடாமல் உண்டாக்கி வருகிறது. தற்போது, சீனத் தேசத்தின் மறுமலர்ச்சி என்பது வரலாற்றில் தவிர்க்க முடியாததாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீன மக்கள் தொடர்ந்து இனிமையான வாழ்க்கைக்கு முயற்சி மேற்கொண்டு, மேலதிக வளர்ச்சி சாதனைகளை உருவாக்கி, சீனாவின் புதிய வளர்ச்சியை உலகிற்கு புதிய வாய்ப்பாக அளிப்பார்கள்.