சீன தனிச்சிறப்புடைய சோஷலிச பாதை
2021-07-03 15:56:34

சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன பொது மக்களும் சுயமாக தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து நடந்து வருகின்றனர். சீனாவின் வளர்ச்சி இலக்கு, சீன மக்களின் கைகளில் கொடுக்கப்படும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நினைவு விழாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் அறிவித்தார்.

அது என்ன பாதை என்றால், சீன தனிச்சிறப்புடைய சோஷலிச பாதையாகும்.

சோஷலிசம் மட்டுமே சீனாவை மீட்க முடியும். சீன தனிச்சிறப்புடைய சோஷலிசம், சீனாவை வளர்க்க முடியும் என்பது கடந்த 100 ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலை நாடுகள் சில நூறு ஆண்டுகாலத்தில் நிறைவடைந்த தொழில்மயமாக்க போக்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சில பத்து ஆண்டுகாலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவில் ஓரளவு வசதியான சமூகம் பன்முகங்களிலும் கட்டியமைக்கப்பட்டது என்று ஜுலை முதல் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அறிவித்தார். இது உலகில் முக்கியத்துவம் வாயந்த நிகழ்ச்சியாகும்.

புதிய வளர்ச்சி கட்டத்தில், சீனா மனித சமூகத்தின் அனைத்து சாதனைகளையும் கற்றுக்கொள்ளும். ஆனால், சில நாடுகளின் கட்டளைகளைக் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.