அமைதியான வளர்ச்சி பாதையில் ஊன்றி நிற்கும் சீனா
2021-07-03 19:52:08

மனித வளர்ச்சி இலக்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி கவனம் செலுத்தி, முன்னேற்றும் சக்திகளுடன் இணைந்து அனைத்து வளர்ச்சிகளையும் நனவாக்க சீனா விரும்புகின்றது. சீனா  உலக அமைதியையும் சர்வதேச ஒழுங்கையும் பேணிக்காத்து, உலக வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

கடந்த 5000 ஆண்டுகாலத்தில் சீனாவில் தொடர்ந்து வரும் எழுச்சி அமைதியாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்குத் தலைமை தாங்கி, நாட்டை வளர்த்து வருகின்றது. மேலை நாடுகளைப் போன்று அல்ல. வலிமையைப் பெற்ற சீனா இதர நாடுகள் மீது வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. இது மனித முன்னேற்ற இலட்சியத்திற்கான முக்கிய பங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.