© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிக இன்னல்களைச் சந்தித்த போதிலும் செழிப்புடன் வளர்ந்து வருகிறது. கட்சியை பன்முகங்களிலும் கண்டிப்பான முறையிலும் ஒழுங்கு செய்து, பல்வேறு காலக் கட்டங்களில் எதிர்நோக்கும் அபாயத்தையும் சோதனையையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாமல் சமாளிப்பது இதற்கு முக்கிய காரணமாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷிச்சின்பிங் கட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட மாநாட்டில் தெரிவித்தார்.
கடந்த நூற்றாண்டுக்காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட போக்கினை மீளாய்வு செய்து, தன்னை துணிவுடன் புரட்சி செய்து, இக்கட்சி இதர கட்சிகளுடன் வேறுபடும் தெளிவான சின்னமாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். 1926ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஊழல் எதிர்ப்பு ஆவணத்தை முதன்முறையாக வெளியிட்டது. சீனப் புரட்சிக்கு தலைமை தாங்கி, சீன மக்கள் குடியரசை நிறுவி, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை நடைமுறைப்படுத்திய போக்கில், கட்சியைக் பன்முகங்களிலும் கண்டிப்பான முறையிலும் ஒழுங்கு செய்வதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னேற்றி வருகிறது. குறிப்பாக கட்சியின் 18ஆவது தேசிய மாநாடு துவங்கியது முதல் இது வரை, இக்கட்சி சகிப்பின்றி ஊழலை எதிர்த்து, தன் தலைமையாற்றல் மற்றும் போராட்ட ஆற்றலை தெள்ளத்தெளிவாக உயர்த்துவது, சர்வதேச சமூகத் துறையினரின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.
சீன அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பின், சீனாவின் கட்டுப்பாட்டுக் கண்காணப்பு நிறுவனத்தால் ஊழல் தொடர்பான 38 லட்சத்து 5 ஆயிரம் வழக்குகளும் 40 லட்சத்து 89 ஆயிரம் பேரும் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
ஒர் அரசியல் கட்சியை ஆட்சி செய்வது, ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கு முக்கிய உத்தரவாதமாகும். சீனக் கம்யூனில்ட் கட்சி தன்னை புரட்சி செய்து, கட்சியை ஒழுங்கு செய்யும் அனுபவத்தை ஆராய்ந்து திரட்டுவது, நாட்டை ஆட்சி செய்யும் நிலையை உயர்த்துவதோடு, பன்னாட்டு கட்சிகளுக்குப் பயனுள்ள அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.