மக்களுக்காக பாடுபட்டு வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி
2021-07-05 20:23:53

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை சீன மக்களிடமிருந்து பிரிக்கச் செய்யும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 9 கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. 140 கோடி சீன மக்கள் இதை ஒப்புக்கொள்ள கூடாது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷிச்சின்பிங் கட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட மாநாட்டில் தெரிவித்தார்.

கடந்த நூற்றாண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்களுக்கு தலைமை தாங்கி, சீன மக்கள் குடியரசை உருவாக்கி, சோஷலிச கட்டுமானத்தில் ஈடுபட்டு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை நடைமுறைப்படுத்தி, ஓரளவு வசதி படைத்த சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்கியுள்ளது. தற்போது அனைவரும் செல்வமடையும் இலக்கை நோக்கி இது முன்னேறி வருகிறது. அருமையான வாழ்க்கை மீது சீன மக்களின் ஆசையை நிறைவு செய்து, சீன மக்கள் நல்ல வாழ்க்கை நடத்த உதவி செய்வது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கமாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்கிறது. மக்களைச் சார்ந்து அனைத்து வேலைகளையும் செய்கிறது. 2ஆவது நூற்றாண்டு இலக்கை நனவாக்க பாடுபட்டு வரும் போக்கில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்களுக்கு தொடர்ந்து தலைமை தாங்கி, மேலதிக வளர்ச்சி அற்புதங்களை உருவாக்கும்.