சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சி
2021-07-06 19:48:43

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 5ஆம் நாள் பெய்ஜிங்கில், பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்லுங் மற்றும் ஜெர்மனி தலைமை அமைச்சர் மெர்கெல் அம்மையாருடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 3 திங்கள் காலத்தில் இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள், 2ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தை சீனாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான நெருக்கமான உறவை வெளிகாட்டியுள்ளது.

அடிப்படையில் சீனாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையில் வேற்றுமை குறைவு.

சுயமான நெடுநோக்கை கொண்ட ஐரோப்பா, சீனாவுடனான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, வேற்றுமையை நீக்கி, உலக அறைகூவல்களைச் சமாளிக்க பங்காற்ற வேண்டும் என்று சீனா விரும்புகின்றது.