அரசியல் கட்சி மக்களுக்கும் மனிதகுலத்துக்கும் இன்ப வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தை விளைவிக்க வேண்டும்
2021-07-07 18:51:18

மனிதகுல முன்னேற்றத்தைத் தூண்டும் முக்கிய ஆற்றலாக, அரசியல் கட்சி சரியான முன்னேற்றத் திசையை நோக்கி, மக்களுக்கும் மனிதகுலத்துக்கும் இன்பமான வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தை விளைவிக்கும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்க வேண்டும். 6ஆம் நாள் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலக அரசியல் கட்சிகளின் உச்சி மாநாட்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது, அவர், 160க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேலான அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் நிறுவனங்களின் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு துறைகளிலிருந்து வந்த சுமார் பத்து ஆயிரம் பிரதிநிதிகள் ஆகியோருடன், மக்களுக்கு இன்பமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசியல் கட்சியின் பொறுப்பு என்பது பற்றி விவாதித்தனர். ஷிச்சின்பிங் அரசியல் கட்சி ஏற்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பை பன்முகங்களிலும் விளக்கிக் கூறி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்மொழிவை வழங்கினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, உலகில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் நிறுவனங்களுடன் இணைந்து, சரியான வரலாறு மற்றும் மனிதகுல முன்னேற்றத் திசையை நோக்கி, மேலும் அருமையான எதிர்காலத்தை தொடர்ந்து உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.