மனித உரிமை பிரச்சினையை ஆஸ்திரேலியா மீளாய்வு செய்ய வேண்டும்
2021-07-09 20:39:43

ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 47ஆவது கூட்டத்தொடரில் ஆஸ்திரேலியாவின் மனித உரிமை நிலைமை பற்றிய அறிக்கை 8ஆம் நாள் பரிசீலனை செய்யப்பட்டது. சீனா, ரஷியா, சிரியா முதலிய நாடுகளும், ஐ.நா அகதிகள் அலுவலக்கத்தின் பிரதிநிதியும் மனித உரிமையை மீறிய ஆஸ்திரேலியாவின் செயலில் கவனம் செலுத்தினார்.

கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளில், பழங்குடியின மக்களை ஆஸ்திரேலியா தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

இது மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவிலுள்ள இனவெறி எதிர்ப்பு அமைப்பு ஒன்று வெளியிட்ட ஆய்வின்படி, அந்நாட்டில் முஸ்லீம்கள், சீன வம்சாவழி மக்கள் மற்றும் பழங்குடி இன மக்கள் மீது இனவெறி தாக்குதல் அதிகம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

உள்நாட்டின் மனித உரிமையில் கவனம் செலுத்தாத ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள், வெளிநாட்டு மக்களின் மனித உரிமைகளைச் சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கான் அப்பாவி மக்களைக் கொன்ற சம்பவம் இதில் அடங்கும்.

மனித உரிமையைச் சாக்குப்போக்காக கொண்டு பிற நாடுகளின் உள் விவகாரத்தில் தலையீடு செய்யும் ஆஸ்திரேலியா, தன்னை மீளாய்வு செய்ய வேண்டும்.