அமெரிக்காவின் தடைகளால் யாரையும் பயமுறுத்த முடியாது
2021-07-09 13:16:32

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, "ஹாங்காங்கின் நிலைமை குறித்து செயல்படுத்தி வரும் தேசிய அவசரநிலையை" நீட்டிப்பு செய்துள்ளதோடு ஹாங்காங் மீதான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவும் 7ஆம் நாள் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளை கடுமையாக மீறியவை எனக் கூறி, சீனா இவற்றுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்க தந்திரங்கள் அத்தனையும் வீணாகியுள்ளன. அவர்களால் ஹாங்காங்கில் தொடர்ந்து குழப்பம் விளைவிக்க தற்போது இடமில்லாமல் போய்விட்டது.

கடந்த ஆண்டில், சீன மத்திய அரசு ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான சட்டத்தைச் செயல்படுத்தி, ஹாங்காங்கில் தேர்தல் முறையை முழுமைப்படுத்தி, தேசிய பாதுகாப்பை திறம்பட பாதுகாத்து, ஹாங்காங்கின் சமூக நிதானத்தை மீட்டெடுத்து, ஹாங்காங் மக்களின் பல்வேறு உரிமைகளை பேணிக்காத்துள்ளதால், ஹாங்காங் புதிய தோற்றம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டில், ஹாங்காங் முதலீட்டை ஈர்க்கும் திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது ஈர்த்த முதலீடு 5000 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இதனால், வெளிச்சக்திகள் தன்னிச்சையாக ஹாங்காங் விவகாரத்தில் தலையிட்ட நாட்கள் முடிவுக்கு வந்துள்ளன.