ஹாங்காங் மக்களின் நலனைப் பேணிக்காக்கும் ஆதரத்தூண் தேசிய பாதுகாப்புச் சட்டம்!
2021-07-09 10:19:49

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டில் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் உரிமை மற்றும் மக்களின் நலனைப் பேணிக்காப்பதில் ஆதரத்தூணாகப் பெரும் பங்காற்றியுள்ளது.

முதலாவது, இச்சட்டத்தின்படி ஹாங்காங் மக்களின் மனநிலை நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் சீனாவுக்கு எதிரான சக்தி மற்றும் வெளிப்புற தலையீட்டுச் சக்தியைக் குறிவைத்து பெரும்பாலான ஹாங்காங் மக்களின் நலனைப் பேணிக்காப்பதாகும். தற்போது ஹாங்காங் சமூகம் நிலையான ஒழுங்கான நிலைக்குத் திரும்பியுள்ளது.

இரண்டாவது, சர்வதேச நிதி, கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக மையமான ஹாங்காங்கின் தகுநிலை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தக சூழலும் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஈர்ப்பாற்றலும் பெருமளவில் உயர்ந்துள்ளன. இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் ஹாங்காங்கின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 29.4 மற்றும் 25.7விழுக்காடு அதிகரித்துள்ளன.

மூன்றாவது, இவ்வாண்டு சீனா 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தைத் துவங்கியுள்ளது. ஹாங்காங்கின் வளர்ச்சிக்கு இது புதிய வாய்ப்புக்களைக் கொண்டு வருவது உறுதி. இநத் வாய்ப்புகளைப் இறுகபற்றி ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான சட்டம் பாதுகாப்பான நிலையான சூழலை உருவாக்கியுள்ளது.

ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள், ஹாங்காங் மக்களே ஹாங்காங்கை ஆளுவது என்ற கொள்கைகளை பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தித் தாய்நாட்டைச் சார்ந்திருந்து ஹாங்காங் மக்கள் உண்மையான சுதந்திரம் மற்றும் மக்களாட்சியை அனுபவித்து பல்வேறு உரிமைகளை முழுமையாக உறுதிப்படுத்த முடியும் என இந்த ஓராண்டின் மாற்றம் நிரூபித்துள்ளது.