ஹாங்காங்கில் ஊடக சுதந்திரத்துக்கு உத்தரவாதம்
2021-07-12 17:30:58

ஊடகச் சுதந்திர ஒன்றியத்தின் சார்பில் வெளியான அறிக்கை ஒன்றை, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஜூலை 10ஆம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையில், மூடப்பட்ட ஆப்பிள் நாளேடு பற்றி மேலை நாடுகள் கவனம் செலுத்தி, ஹாங்காங் அரசின் ஊடக சுதந்திரத்துக்கான கட்டுப்பாடு பற்றி வசை பாடின. அமெரிக்கா, சில மேலை நாடுகளுடன் இணைந்து, ஊடக சுதந்திரம் என்பதைப் பயன்படுத்தி, ஹாங்காய் விவகாரத்தில் தலையீடு செய்த மற்றொரு கேலிக்கூத்து இது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இதனால் எந்த பலனும் இல்லை.

அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகளின் செயல்கள், சர்வதேசச் சமூகத்தை ஏமாற்ற முடியாது.

முதலாவதாக, ஆப்பிள் நாளேடு பற்றிய பிரச்சினைக்கும், ஊடக சுதந்திரத்துக்கு தொடர்பு இல்லை. இந்த நாளேடு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது.

இரண்டாவதாக, ஆப்பிள் நாளேடு மூடப்படுவது, இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு சொந்தமாகவே செய்த முடிவாகும்.

ஆப்பிள் நாளேடு போன்ற ஊடகம் நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கும் செயல்களை உலகில் எந்த நாடு அனுமதிக்கும் என்ற கேள்வி எழுகிறது.

ஹாங்காங் அடிப்படைச் சட்டம், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கு இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம், ஹாங்காங் மனித உரிமைக்கான சட்ட முன்மொழிவு ஆகியவை, ஹாங்காங்கில் ஊடக சுதந்திரத்துக்கு முழுமையான உத்தரவாதம் அளிக்கின்றன.