நோய் தடுப்பில் அமெரிக்கா முதலிடமா?
2021-07-13 18:29:35

அமெரிக்காவின் ப்ளூம்பர்க் பத்திரிகை வெளியிட்ட கொவைட்-19 நோய் தடுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை முதலிடத்தலும், சீனாவை எட்டாவது இடத்திலும் வைத்து முரணான தகவலை வெளியிட்டுள்ளது. இப்புள்ளிவிவரத்தில் மிக முக்கியமாக கருதப்படும் காரணிகளான பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஊரடங்கு மற்றும் நோய் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் தடை நடவடிக்கைகள் கணக்கில் கொள்ளப்பட்டது. இதனால் இப்பட்டியலின் நம்பகத்தன்மை மீது மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்

அமெரிக்காவில் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3.38 கோடியைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் அதிகம். ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு தவறான நடவடிக்கைகளால் அமெரிக்க அரசு கடும் விமர்சனத்துக்குள்ளானது. உலக அளவில் ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் தொகை 5 விழுக்காடு மட்டுமே. ஆனால், உலக அளவில் ஒட்டு மொத்த நோய் பாதிப்பில் அமெரிக்கா 17 விழுக்காடும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் 15 விழுக்காடும் வகிக்கிறது.

கொள்ளை நோயில் அரசியல் செய்து உண்மையை மறைத்து, கருப்பை வெள்ளை என்றும் வெள்ளையைக் கருப்பு என்றும் கூறுவது மிகவும் ஆபத்தானது. இத்தகைய செயல், மனிதாபிமானம் அற்றதாக அமைந்து விடும்.