ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் சிறந்த எதிர்மறை மாதிரி
2021-07-14 20:02:31

அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் அண்மையில் "கரோனா வைரஸ் எதிர்ப்பு தொற்றுநோய் தரவரிசையை" வெளியிட்டது. அதில், உலகளாவிய தொற்றுநோய் எதிர்ப்பு செயல்திறனில் அமெரிக்கா "மிக சிறந்த" நாடாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவிலுள்ள 6 இலட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலகில் முதலாவது இடத்தை வகிக்கிறது. இது, இத்தரவரிசையை நகைப்பிற்கிடமாக மாற்றியது. இத்தரவரிசை அதன் "நியாயமான மற்றும் தப்பு எண்ணமில்லாத" முகமூடியையும் "மேற்கு நாடுகளின் மையக் கருத்தைக்" கொண்ட மதிப்பாகவும் அரசியல் கருவியாகவும் பயன்படுத்துவதன் உண்மையான முகத்தையும் வெளிப்படுத்துகிறது.

தற்போது, அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் செய்தி ஊடகங்கள் தன்னிச்சையாக மக்கள் கருத்தை கையாளும் காலம் இல்லை. இத்துறையில், ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் சிறந்த எதிர்மறை மாதிரியாகும்.