உலகளவில் நோய் தடுப்புப் பணிக்கு சீனாவின் பெரும் ஆதரவு
2021-07-14 18:57:42

சீனாவின் இரு நிறுவனங்களுடன் கொவேக்ஸ் திட்டத்துக்குத் தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக உலகத் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டணி அண்மையில் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக அடுத்த ஆண்டு முதல் பாதிக்குள் 55 கோடி சீனத் தடுப்பூசிகள் கொவேக்ஸ் திட்டத்தில் சேர்ந்த நாடுகளுக்கு வினியோகிக்கப்படும்.

இதுவரை 100க்கும் அதிகமான நாடுகளில் சீனாவின் கரோனா தடுப்பூசி அனுமதிப்பட்டுள்ளது குறிப்பிடப்படத்தக்கது. சீனாவின் தடுப்பூசிகள் சரியான நேரத்தில் வரும் மழையைப் போல் உள்ளது என்று பல வளரும் நாடுகள் போற்றுகின்றன.

தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளின் மக்களால் வாங்கப்படவும் பயன்படுத்தப்படவும் கூடிய பொது உற்பத்திப் பொருட்களாக மாற்ற வேண்டும் என்பது உலகிற்கு சீனா வழங்கிய வாக்குறுதியாகும். இதற்காகச் சீனா தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.