சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் வளர்ச்சி
2021-07-14 14:18:09

சீனச் சுங்க துறை தலைமை பணியகம் 13ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 2021ஆம் ஆண்டின் முற்பாதியில் சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 18 லட்சத்து 7 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 27.1 விழுக்காடு அதிகரித்து, வரலாற்று பதிவாகியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியையும், பொருளாதார சமூக வளர்ச்சியையும் சீனா ஒன்றிணைக்கும் சாதனைகள் வலுப்பட்டு வருவதை சீனாவின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாண்டு முழுவதும் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக அளவின் நிதானத்துக்கும், தர உயர்வுக்கும் இது சிறந்த அடித்தளமிட்டுள்ளது.

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் பெற்றுள்ள சாதனைகள், பல காரணிகளுடன் தொடர்புடையவை.

முதலில், சீனப் பொருளாதாரம் நிதானமாகி சீராக வளர்ந்து வருவது, வெளிநாட்டு வர்த்தகத்தின் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு ஆதரவளித்துள்ளது.

தவிர, உலகளவில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு, உலகப் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதுடன், வெளிப்புற தேவைகள், சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் மீட்சியை விரைவுபடுத்தியுள்ளது.

சீனாவின் வெளிநாட்டு வர்த்தக மீட்சி, சீனா மட்டுமல்ல உலகிற்கு துணை புரிக்கிறது. நிதானமான உலக வினியோக சங்கிலிக்கு இயக்கு ஆற்றல் வழங்குவதை தவிர, கரோனா வைரஸ் தடுப்புக்கான பன்னாட்டு முயற்சிக்கு சீனாவின் ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.