சீனப் பொருளாதாரத்தின் நிதான வளர்ச்சி
2021-07-15 20:23:16

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியம் 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, 53, 21,670 கோடி யுவான்னாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 12.7 விழுக்காடு அதிகமாகும். நுகர்வு, முதலீடு, வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவை நிதானமாகச் செயல்பட்டு, சீனப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளன.

முதலாவது, சீனப் பொருளாதாரத்தின் உட்புறச் சக்தி படிப்படியாக வலுப்பட்டு வருகிறது. இரண்டாவது, சீனாவின் ஒட்டுமொத்தக் கொள்கை, சந்தைக்கு உயிராற்றலைத் தொடர்ந்து ஊட்டி வருகின்றது.

முழு ஆண்டிலும் நிதானமான வளர்ச்சிப் போக்கை நோக்கி சீனப் பொருளாதாரம் முன்னெடுத்து வருகின்றது.

எதிர்காலத்தில், உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு வலிமையான ஆதரவுகளை வழங்க உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.