சின்ச்சியாங்கின் மனித உரிமை இலட்சியத்தில் பெற்றுள்ள சாதனைகள்
2021-07-16 10:29:15

சின்ச்சியாங்கில் பல்வேறு தேசிய இனங்களின் சம உரிமைக்கான உத்தரவாதம் பற்றிய வெள்ளையறிக்கையை சீன அரசவை தகவல் தொடர்புப் பணியகம் 14ஆம் நாள் வெளியிட்டது. அதிக தகவல்கள் மற்றும் தரவுகளைக் கொண்டு, சின்ச்சியாங்கின் பல்வேறு தேசிய இன மக்கள் சட்டத்தின்படி, குடிமக்கள் உரிமை, அரசியல் உரிமை, பொருளாதார உரிமை, பண்பாட்டு உரிமை மற்றும் மதச் சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை அனுபவித்து வருகின்றனர் என்பதை இவ்வெள்ளையறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு மக்களை மையமாகக் கொண்ட மனித உரிமை கருத்தினால், சின்ச்சியாங்கின் மனித உரிமை இலட்சியத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிரான மேலை நாட்டுச் சக்தியின் பொய் கூற்றுகளை இது மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

வளர்ச்சி என்பது, பல்வேறு மனித உரிமைகளை நனவாக்குவதற்கு இன்றியமையாதது. 1978 முதல் 2020ஆம் ஆண்டு வரை, சின்ச்சியாங்கில் நகரவாசிகள் மற்றும் கிராமவாசிகளின் நபர்வார் செலவழிக்க கூடிய வருமானம் முறையே 108.2 மடங்கு மற்றும் 116.9 மடங்கு அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு இறுதி வரை, தற்போதைய வரையறையின்படி சின்ச்சியாங்கில் உள்ள 27 லட்சத்து 30 ஆயிரம் கிராமிய மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். இதன் மூலம் சின்ச்சியாங்கின் பல்வேறு தேசிய இன மக்கள் சமமான வளர்ச்சியை அனுபவிக்கின்றனர் என்பதையும் கூட்டுச் செல்வத்தை நனவாக்குவது, வளர்ச்சியின் இலக்காகும் என்பதையும் காண முடிகிறது. 

தற்போது, வரலாற்றில் மிக நல்ல வளர்ச்சியின் காலக்கட்டத்தில்  சின்ச்சியாங் உள்ளது. சின்ச்சியாங்கின் வளர்ச்சி மூலமூம், எதார்த்த நடவடிக்கை மூலமூம் மனித உரிமையை சீனா எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதை பன்னாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்.