ஏபெக் கரோனா தடுப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு நம்பிக்கை தரும் சீனாவின் திட்டவரைவு
2021-07-17 16:35:04

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாளிரவு அழைப்பை ஏற்று பெய்ஜிங்கில் காணொளி வழியாக ஏபெக் அமைப்புத் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். கரோனா தடுப்புக்கான ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார மீட்சி பற்றி அவர் நான்கு முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்தார். கூட்டு அறைக்கூவலைத் தோற்கடிக்கும் ஏபெக் பிரதேசத்தின் மனநம்பிக்கையைப் பெரிதும் அதிகரித்தார். ஷிச்சின்பிங்கின் உரையைப் பல்வேறு தரப்புக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளன. அது கரோனா தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்புக்கும் பொருளாதார மீட்சியை முன்னேற்றுவதற்கும் பயனுள்ள திட்டவரைவை வழங்கி பெரும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக பிரேசில் பொருளியலாளர் ரோனி லின்ஸ் கருத்து தெரிவித்தார்.

மேலும், சர்வதேச சமூகத்தின் கரோனா தடுப்புக்கான சீனாவின் ஆதரவான நடவடிக்கைகளை ஷிச்சின்பிங் மீண்டும் வலியுறுத்தினார். வரும் 3 ஆண்டுகளில் வளரும் நாடுகளுக்கு 300கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியுதவி வழங்கல், நோய் சமாளிப்பு மற்றும் பொருளாதார மீட்சி என்ற நிதியத்தின் உருவாக்கத்துக்கு நன்கொடை வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளைச் சீனா நிறைவேற்றவுள்ளது. இந்தப் பயனுள்ள நடவடிக்கைகள் எல்லாம் ஏபெக் பிரதேசம் மற்றும் வளரும் நாடுகளுக்கு நன்மை தரும். சீனா ஏபெக் பிரதேசத்தின் கூட்டாளியுடன் கைகோர்த்து கொண்டு இன்னலைக் கூட்டாகச் சமாளிக்கும் மனவுறுதியை இவை வெளிகாட்டுகின்றன.