அமெரிக்காவின் நடவடிக்கை அபத்தமானது
2021-07-17 17:57:12

ஹாங்காங் தொடர்பான “வணிக எச்சரிக்கை”யை அமெரிக்கா 16ஆம் நாள் வெளியிட்டு, ஹாங்காங்கின் வணிகச் சூழல் பற்றி அவதூறு செய்ததோடு, ஹாங்காங்கிலுள்ள சீன மத்திய அரசு வாரிய அதிகாரிகளின் மீதும் தடை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் தனது மேலாதிக்கவாதத்தை நிலைநிறுத்துவதில் தடை நடவடிக்கை அமெரிக்காவின் வழக்கமான சூழ்ச்சி. ஆனால், இந்நடவடிக்கையால் யாரையும் பயமுறுத்த முடியாது.

கடந்த ஆண்டில், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பை பேணிக்காப்பதற்கான சட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஹாங்காங்கிற்கு முன்னுரிமை வழங்கப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்தது. ஆனால், கடந்த 12 மாதங்களில், ஹாங்காங் நிறுவனங்களின் முதல் பங்கு பத்திர விற்பனை அளவு 50 ஆயிரம் கோடி ஹாங்காங் டாலரைத் தாண்டியது. முன்பை விட இது சுமார் 50 விழுக்காடு அதிகம்.

இதேபோல், இந்த முறை அமெரிக்காவின் தடை நடவடிக்கையும் தோல்வியடைவது உறுதி. ஹாங்காங் பிரச்சினையில் அமெரிக்கா எப்படி செயல்பாட்டாலும் பயன் இல்லை. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை அபத்தமானது.

எந்த வெளிப்புற சக்திகளும் சீனாவின் சிறந்த நிலைமையை சீர்குலைக்க சீனா ஒருபோதும் அனுமதிக்காது. அமெரிக்காவின் தவறான செயலுக்கு 140 கோடிக்கும் அதிகமான சீனர்கள் உறுதியாக பதிலடி கொடுப்பார்கள்.