அமெரிக்காவின் மக்கள் கருத்துக் கணிப்புகளில் சதி வலை!
2021-07-19 21:24:30

அமெரிக்காவில் புகழ்பெற்ற ப்ளூம்பார்க் நிறுவனம் மற்றும் பேயு ஆய்வு மையம் ஆகியவை சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு கருத்து கணிப்புகளின் முடிவை வெளியிட்டுள்ளன.

ப்ளூம்பார்க் நிறுவனம் வழங்கிய முடிவில்,  உலகளவில் கோவிட்-19 தொற்று நோயை எதிர்ப்பதில் மிகச் சிறந்த திறமை கொண்ட நாடு அமெரிக்கா தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேயு ஆய்வு மையம் வழங்கிய முடிவில்,  சீனா பற்றிய சர்வதேச பிம்பம் எதிர்மறையாக இருந்தது. மேலும் அமெரிக்கா பற்றிய சர்வதேச பிம்பம் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  இந்த இரண்டு கருத்து கணிப்புகளின் முடிவுகளே, உலக மக்களின் கருத்துகளிடையே ஏளனத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குலகம் கருத்துக் கணிப்பில் தந்திரங்களைச் செயல்படுத்துவதை உணரலாம். ப்ளூம்பார்க் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், மதிப்பீட்டு விதிமுறையைத் திருத்துவதன் மூலம் கோவிட்-19 எதிர்ப்பில் சிறந்த திறமையுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. இதன் விளைவாக, உலகளவில் எதிர் விளைவைச் சந்தித்தது.

ப்ளூம்பார்க் நிறுவனம், பேயு ஆய்வு மையம்  போன்ற நிறுவனங்கள்,  தொழில்முறை மற்றும் சுதந்திரமான நிறுவனங்கள் என கூறிக் கொள்கின்றன. ஆனால், அமெரிக்கா தொடுத்த கருத்து ரீதியிலான போரில் வெவ்வேறு தந்திரங்களைக் கையாண்டு, அமெரிக்கா முடிவு செய்யும் ஒழுங்குமுறையைப் பின்பற்றி பேணிக்காப்பதாக உள்ளது.

சர்வதேச ஒழுங்குமுறையில், அமெரிக்கா மட்டும் இல்லை. ஆனால், அமெரிக்காவின் சில செய்தி ஊடகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள், அமெரிக்கவை மட்டும் சார்ந்து அதன் விதிமுறைக்கு அடிமையாக உள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் வலை வீசுவதால்,  உலகின் கேலிக்கூத்துக்கு ஆளாவதோடு, சொந்த தொழில் அடையாளச் சின்னத்தின் நற்பெயரை இழக்க நேரிடும் என அவர்களுக்கு புரியவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.