கோவிட்-19 தோற்றம் பற்றிய இரண்டாம் கட்ட ஆய்வு நடக்கும் இடம் அமெரிக்கா தான்!
2021-07-20 20:46:31

கோவிட்-19 தோற்றம் பற்றிய இரண்டாம் கட்ட ஆய்வுத் திட்டத்தை உலக சுகாதார அமைப்பின் செயலகம் சமீபத்தில் முன்னெடுத்துள்ளது. தற்போது வரை, 55 நாடுகள், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸுக்கு அனுப்பிய கடித்த்தில்,  அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொண்டு, அரசியல் தந்திரத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.

உண்மையில், கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து போராடுவதில் அமெரிக்காவிடம் சந்தேகங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டுள்ளன. அதைக் கருத்தில் கொண்டு, உலகளவில் வைரஸ் தோற்றம் குறித்து புலானாய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய இடம் அமெரிக்கா தான்.

குறிப்பாக, அமெரிக்காவில் ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகம் 2019ஆம் ஆண்டு ஜுலை திங்கள் திடீரென மூடப்பட்டது ஏன்? இதற்கும்,   அமெரிக்காவின் பகுதியளவில் ஏற்பட்ட விவரிக்கப்படாத சுவாச நோய், மின் சிக்ரெட் நோய் ஆகியவற்றுக்கும் இடையே தொடர்பு உள்ளதா?  போன்ற சர்வதேச சமூகத்தின் கேள்விகளுக்கு, அமெரிக்கா இது வரை பதிலளவிக்கவில்லை.

உலக சுகாதார அமைப்பு, ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் விசாரிக்க வேண்டும் என்று சீன இணைய பயன்பாட்டவர்கள் வலியுறுத்தி வருகின்கின்றனர்.

வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு, சீனாவில் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற ஆய்வு அமெரிக்காவில் ஏன் நடத்தப்படப் போவதில்லை. இவ்வாறு செய்தால், இத்தகைய ஆய்வுக்கு அறிவியல்பூர்வ ஆதாரம் கிடைக்குமா? வைரஸ் தோற்ற ஆய்வில், உலக சுகாதார அமைப்பு, நியாயமான முறையில் செயல்படாமல் இருந்தால், அந்த ஆய்வு  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமா  என்ற சந்தேகம் எழுகிறது.

இந்நிலையில், சர்வதேச சமூகத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அமெரிக்கா, கதவைத் திறந்து, வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும்.