இணையத் தாக்குதல் குறித்து வழக்கம் போல பொய் தகவல்களை பரப்பி வரும் அமெரிக்கா
2021-07-21 19:51:29

அமெரிக்கா,  அதன் சில கூட்டணி நாடுகளை ஒன்றாக திரட்டி,  சீனா இணையத் தாக்குதல் நடத்துவதாக அவதூறுப் பரப்பி வருகின்றது. ஆனால், இதற்கு அமெரிக்கா,  முழுமையான ஆதாரங்களை வழங்க முடியாது.  சீனா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.  இதனிடையில் வழக்கம் போல் மீண்டும்  மற்றொரு பொய்யை உருவாக்கி வரும் அமெரிக்கா, அரசியல் தந்திரத்தைச் செயல்படுத்துவது உண்மை தான்.

இணையப் பாதுகாப்புத் துறையில் சொந்த தொழில் நுட்ப மேன்மையைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, உலகளவில் பெரிய அளவில் வேவு பார்ப்பதிலும் சட்டவிரோதமாக பிற நாடுகளின் உணர்ச்சிமிக்க உளவு மற்றும் குடிமக்களின் தனியார் தகவல்களைத் திரட்டுவதிலும் ஈடுபட்டு வருகிறது. பிரிஸ்ம் எனும் கண்காணிப்புத் திட்டம்,  கூட்டணி மீதான ஒட்டுகேட்பு ஆகியவை,  உலகின் இணைய பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் அமெரிக்கா முதலிடம் என்று உணர்ந்திருக்கிறது.

அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனத்தைச் சேர்ந்த எ.பி.டி-சி-39 எனும் இணையத் தாக்குதல் அமைப்பு,, சீன விண்வெளித் துறையின் ஆய்வு நிறுவனங்கள், எண்ணெய் தொழில் நிறுவனங்கள், பெரிய இணைய நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் ஆகியற்றின் மீது 11 ஆண்டுகளாக தொடர்ந்து இணையத் தாக்குதல் தொடுத்துள்ளது. இதுவே,  சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு கடும் தீங்கு விளைவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான உண்மையான ஆதாரங்கள் உள்ளன. சீனா மீது மிக  அதிக இணையத் தாக்குதல் நடத்தும் நாடு, அமெரிக்கா தான். ஆனால், உண்மையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்கா சீனா மீது அவதூறு பரப்பி வருகிறது.

தன்னை தான் இணைய பாதுகாவலர் என அழைக்கும் அமெரிக்கா, மீண்டும் மீண்டும் இணையத் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இரட்டை நிலைப்பாடு வியக்க வைக்கிறது.