ஒலிம்பிக் பொன்மொழியில் சேர்க்கப்படும் ‘’மேலும் ஒற்றுமை” என்னும் சொற்களின் முக்கியத்துவம்
2021-07-22 10:19:08

32 ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது. “மேலும் விரைவு, மேலும் உயரம், மேலும் வலிமை” என்ற ஒலிம்பிக் பொன்மொழியில் மேலும் ஒற்றுமை என்பதைச் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அண்மையில் தீர்மானித்தது.

தற்போதைய நிலைமையின் படி, கரோனா வைரஸ் இன்னும் உலகளவில் மோசமாகப் பரவி வருகிறது. முன்பை விட,சிறப்பு, நட்பு, மதிப்பு மற்றும் ஒற்றுமை கொண்ட ஒலிம்பிக் எழுச்சி வேண்டும். “மேலும் ஒற்றுமை” என்பது மனிதகுலம் மேலதிக அறைகூவல்களைச் சமாளிப்பதற்கு மேலதிக துணிவு மற்றும் வலிமையை ஏற்படுத்தும். பொதுச் சுகாதாரப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதிலும், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதிலும், ஒற்றுமையே  மிக வலிமையான ஆயுதமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.