சீன-அமெரிக்க உறவை மேம்படுத்த பயனுள்ள நடவடிக்கைகள் தேவை
2021-07-27 11:09:35

சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சியெ ஃபொங், அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ஷெர்மன் ஆகியோர் ஜுலை 26ஆம் நாள் சீனாவின் தியன்ஜின் மாநகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். இவ்விரு தரப்புகளுக்கு இடையில், இவ்வாண்டின் மார்ச் திங்களில் அமெரிக்காவின் ஆங்கோரேஜ் மாநகரில் நடந்த சந்திப்புக்குப் பிறகான மற்றொரு உயர் நிலைப் பேச்சுவார்த்தை இதுவாகும்.

இப்பேச்சுவார்த்தையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் சாதகமற்ற உறவை மாற்றுவது பற்றி சீனத் தரப்பு தனது கருத்துக்களையும் மனப்பான்மையையும் தெளிவாக வெளிப்படுத்தியது.

இப்பேச்சுவாரத்தைக்கு முன்னதாக, அமெரிக்க-சீன உறவு தொடர்ந்து மோசமாவதைத் தடுக்கும் விதமாக, இரு நாடுகளின் உறவுகளைப் பாதுகாக்கும் எல்லையாக  ஷெர்மனின் பயணம் அமைய வேண்டும் என்று அமெரிக்கத் தரப்பு தெரிவித்திருந்தது. உண்மையில், சீனத் தரப்பு வெளிப்படுத்திய கருத்துக்களும் இரு விவரபட்டியல்களும், இரு நாட்டுறவை மேம்படுத்தும் பயனுள்ள பாதுகாப்பு எல்லை தான்.

சீன-அமெரிக்க உறவுக்கு பாதுகாப்பு எல்லையை அமைக்க வேண்டும் என்று அமெரிக்கா உண்மையாக விரும்பினால், சீனத் தரப்பு வெளியிட்டுள்ள இரு விவரப்பட்டியல்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும். அதோடு, அமெரிக்கா தனது தவறான கொள்கைகளை உடனடியாக திருத்தி, இரு நாட்டுறவின் மேம்பாட்டுக்கு இடையூறாக இருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.