மக்கள் விருப்பத்துடன் உலக சுகாதார அமைப்பு டெட்ரிக் ஆய்வகத்தில் புலானாய்வு மேற்கொள்ள வேண்டும்
2021-07-28 10:28:33

மக்கள் விருப்பத்துடன் உலக சுகாதார அமைப்பு டெட்ரிக் ஆய்வகத்தில் புலானாய்வு மேற்கொள்ள வேண்டும்_fororder_VCG111324575706

படம் - CFP

கோவிட்-19 தோற்றம் பற்றி 2ஆவது கட்ட ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டதோடு,  ஆய்வக கசிவு என்ற சாத்தியத்தை நீக்க முடியாதது என்று கூறியுள்ளது. இந்த சூழலில்,  அமெரிக்காவிலுள்ள ஃபோட்ர் டெட்ரிக் ஆய்வகத்தில் புலனாய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் புலானாய்வு செய்ய சர்வதேச் சமூகம் வலியுறுத்துவதற்கு போதுமான ஆதாரம் உண்டு. 2019ஆம் ஆண்டு ஜுலையில், இரண்டு மிக அசாதாரணமான நிகழ்வுகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்தன. முதலில் ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தை மூட அமெரிக்க ராணுவம் திடீரென முடிவு செய்தது.  இரண்டாவதாக,  அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட்-19 தொற்றுடன் ஒடுப்பிடுகையில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளைக் கொண்ட மின் சிகரெட் நிமோனியா நோய் ஏற்பட்டது.  இது ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் வைரஸ் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க கூடும் என்று யூகிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெளிப்புறத்தின் சந்தேகத்தை எதிர்கொண்டு, தேசிய பாதுபாப்பு என்ற பெயரில் மேலதிக தகவல்களை வெளியிட அமெரிக்க அரசாங்கம் மறுத்தது. ஆனால், மக்களிடையே எழுந்துள்ள பெரிய சந்தேகம் மறைந்து விடவில்லை. கூடுதலாக, கோவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வுக்காக, வுஹான் ஆய்வகத்துக்கு செல்ல முடிந்தது. அமெரிக்காவில்  அதிக சந்தேகம் கொண்ட ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்துக்கு செல்ல முடியாது ஏன்? கோவிட்-19 மனித குலத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இத்தகைய தோற்றம் மீண்டும் நிகழாமல் தடுக்க, வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வுப் பணி பல நாடுகளின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

முன்பு, உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முடிவின்படி, சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கசிவு ஏற்பட்டிருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே  உள்ளது என கூறி விட்டு, தற்போது, ஆய்வகச் கசிவு என்ற சாத்தியத்தை நீக்க முடியாது என கூறுகிறது. அதிக சந்தேகத்தை எதிர்கொண்ட ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வத்துக்கு முதன்முதலில் செல்ல வேண்டியது. அறிவியல்பூர்வ ஆய்வுப் பணி தேவையாதாகும் என்று  உலக  மக்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

கோவிட்-19 முதன்முதலில் தோன்றியது என்பதில் அதிக சந்தேசம் கொண்ட அமெரிக்கா, ஒத்துழைப்புக்கு மாறாக, அரசியல் தந்திரங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில், உலகம், உண்மையைத் தேடிப் பார்க்கவும், அரசியல் தந்திரங்களை எதிர்க்கவும் வேண்டும். சி.ஜி.டி.என் சிந்தனைக் கிடங்கு ஜுலை 26ஆம் நாளிரவில் வெளியிட்ட இணைய கருத்துக் கணிப்பு முடிவின்படி, உலக இணைய பயனர்களிடையே 80க்கும் மேற்பட்டோர், வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வுப் பணி அரசியலாக்கப்பட்டுள்ளதாக கருதினர்.

பொது மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும். தற்போது கோவிட்-19 தோற்றம் பற்றிய புலானாய்வை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் பொதுவாக கருதுகின்றனர். இந்நிலையில், மக்களின் விருப்பத்துடன் செயல்பட்டு, உலக சுகாதார அமைப்பு, ஃபோர்ட் டெட்ரிக் உள்ளிட்ட ஆய்வகங்களில் புலானாய்வு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம்,  அறிவியல் அடிப்படையிலான பதில் அளித்து, உலகிற்கு உண்மை கொடுக்க வேண்டும்.