அமெரிக்கா உலகத்துக்கு நச்சுக் கொடுப்பதை நிறுத்த வேண்டும்!
2021-07-29 19:05:06

அமெரிக்கத் தேசிய அறிவியல் கழகத்தின் இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, முழு அமெரிக்காவில் கோவிட்-19 நோய் தொற்று எண்ணிக்கை, 60 விழுக்காட்டு அளவில் குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம். அதாவது சுமார் 6.5 கோடி அமெரிக்கர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. உலகின் மிக பெரிய நாடான அமெரிக்காவில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் நாட்டை விட்டு வெளியேறத் தடை இல்லாத நிலையில், கரோனா வைரஸ் அமெரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது.

2020ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் இவ்வாண்டு மார்ச் வரை, விமானம் மற்றும் தரை போக்குவரத்து மூலம் 2.3 கோடிக்கு அதிகமான அமெரிக்கர்கள் நாட்டிலிருந்து பயணித்துள்ளனர். இதனால் உலகம் முழுவதும் அமெரிக்க நோய் பரவலால் பாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு உலகெங்கும் நச்சு கொடுத்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர், வைரஸ் தோற்ற ஆய்வை அரசியலாக்குவதை நிறுத்தி, நோய் பரவலைக் கட்டுப்படுத்தி, சொந்த மனசாட்சியையும் பொறுப்பையும் வெளிக்காட்ட வேண்டும்.