தைவான் பற்றிய அமெரிக்காவின் தீர்மானத்துக்கு சீனா எதிர்ப்பு
2021-07-30 20:59:25

உலக சுகாதார பேரவையில் பார்வையாளர் என்ற தகுநிலையை மீண்டும் பெற தைவானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உதவியளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, அமெரிக்க நாடாளுமன்ற செனெட் அவையின் தூதாண்மையுறவு கமிட்டி அண்மையில் ஏற்றுகொண்டது. இத்தீர்மானம், சீன-அமெரிக்க மூன்று கூட்டறிக்கைகள், சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடுகளைக் கடுமையாக மீறியுள்ளது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.

ஒரே சீனா என்ற கோட்பாடு, உலகளவில் பொது கருத்தாகும். இதற்கு அறைகூவல் விடுக்கக் கூடாது. அமெரிக்கா, பல முறை தைவான் பிரச்சினையைப் பயன்படுத்தி, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட முயன்று வருகிறது. தைவான் தொடர்பான விவகாரம், சீனாவின் மைய நலன்கள் சம்பந்தமானது. இதற்கான அறைகூவல்களைத் தடுக்கும் விதம், சீனா, தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.