கரோனா வைரஸின் உதவியாளர் அமெரிக்கா!
2021-07-31 15:38:11

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, கடந்த வாரத்தில் அமெரிக்காவில், 5 இலட்சத்து 332 பேர் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இவ்வெண்ணிக்கை, கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் இருந்ததை விட 131.17 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இப்போது டெல்டா என்ற உருமாறிய கரோனா வைரஸ் உலகளவில் பரவி வருகின்றது.

ஜுலை 4ஆம் நாளுக்கு முன், 70 விழுக்காடான அமெரிக்கர்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தலைவர் வாக்குறுதியளித்தார். ஆனால் இந்த இலக்கை நனவாக்கவில்லை.

அண்மையில், கரோனா வைரஸ் தோற்றமிடம் பற்றிய பிரச்சினையை அரசியல்மயமாக்க அமெரிக்கா முயல்கிறது. கரோனா வைரஸ் பரவலை சரியாக சமாளிக்காத தவறுகளை நீக்குவது, அமெரிக்காவின் இந்நடவடிக்கையின் நோக்கமாகும். இப்போதைய அமெரிக்க அரசு, முன்பான அரசின் தோல்வியிலிருந்து அனுபவங்களைக் கற்றுகொள்ளவில்லை. நிபுணர்களின் மதிப்பீட்டின் படி, அக்டோபர் நடுப்பகுதியில், அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாகும்.