சீனாவின் மீது தடை நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்கா!
2021-08-01 19:51:51

அமெரிக்காவின் உயர் நிலை அதிகாரிகள் சிலர், சீனா மற்றும் சீனாவின் அண்டை நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். பசிபிக் பெருங் கடலைக் கடந்த இந்த அதிகாரிகள், சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்குமிடையிலான உறவை சீர்குலைத்து, இந்திய பசிபிக் பெருங் கடல் நெடுநோக்கை கடுமையாக பாதிப்புடைய செய்தனர். சீனாவின் மீது தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கம் இதில் மிக தெளிவானது.

அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ஷேர்மன் அம்மையார் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது கூறுகையில், சீனாவின் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சி செய்யவில்லை என்றார். அமெரிக்கா, தனது வாக்கை மீறி செயல்பட்டு ஏமாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இப்போது சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்குமிடையிலான உறவு சீரானது. அமைதியும் வளர்ச்சியும் இப்பிரதேசத்திலுள்ள நாடுகளின் கூட்டு நோக்கமாகும்

அமெரிக்காவை விட, அண்டை நாடுகளின் விருப்பத்தை சீனாவுக்கு நன்றாக புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.