உலகச் சுகாதார அமைப்பு, அமெரிக்காவின் அரசியல் கருவி அல்ல!
2021-08-02 20:31:21

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் அண்மையில் உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸைச் சந்தித்த போது, உலகச் சுகாதார அமைப்பு சீனா உள்ளிட்ட இடங்களில் கொவைட்-19 பற்றிய மேலதிக புலனாய்வு மேற்கொள்வதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக கூறினார். அதோடு சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் ஒற்றுமையையும் ஒத்த கருத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்று அறிவித்தார்.

ஆனால், தனது சொந்த நாட்டில் கொவைட்-19 நிலவரம் பற்றி தகவல் வெளியிடாமல், அரசியல் தந்திரத்தை நடத்தி, கரோனா வைரஸ் தடுப்புக்கான ஒத்துழைப்புக்கு சர்வதேச தடை மேற்கொண்ட நாடான அமெரிக்கா, இப்போது “சர்வதேச ஒற்றுமை” என்று அழைக்கும் காரணம் அனைவருக்கும் தெரியும். பிளிங்கன் கூறிய “ஆதரவு”, உலகச் சுகாதார அமைப்பைப் பயன்படுத்தி, சீனா மீது அவதூறு பரப்ப விரும்புவதாக தெரிகிறது.

கரோனா வைரஸ் தடுப்புக்கான உலகின் சிறப்புத் தலைமை ஆற்றலாக, உலகச் சுகாதார அமைப்பு அறிவியல் எழுச்சியை நிலைநிறுத்த வேண்டும். அரசியல் நிர்பந்தத்திற்கு சரணடைய கூடாது.