வைரஸ் உருவான இடத்தை கண்டறிவதில் அமெரிக்கா பயங்கரவாதத்தைத் உருவாக்குகிறது
2021-08-04 20:13:30

அமெரிக்க பிரதிநிதி அவையின் வெளியுறவு விவகாரக் குழுவில் குடியரசு கட்சியின் முதன்மை உறுப்பினர் மைக்கல் மெக்கோல் ஆகஸ்ட் 2ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களுக்கு முன் வூ ஹான் நகரில் உள்ள ஓர் ஆய்வுக் கூடத்திலிருந்து கரோனா வைரஸ் கசித்ததற்கான சான்று இருப்பதாக தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பு மீது நிர்ப்பந்தம் திணித்து, சர்வதேச சமூகத்தில் சீனாவை பற்றி அவதூறு பரப்புவது தான், அவரது நோக்கமாகும்.

பொய்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களின் அடிப்படையில் அவரது அறிக்கை எழுதப்பட்டது. இதற்கு நம்பகத்தன்மை மற்றும் அறிவியல் தன்மை ஏதும் இல்லை. இதன் மூலம் சர்வதேச சமூகத் துறையினரை மோசடி செய்ய முடியாது.

கரோனா வைரஸ் உருவான இடத்தை கண்டறிவது, அறிவியலின் அடிப்படையில் நடைபெற வேண்டும். அரசியல் முறையில் இதை கையாளக் கூடாது. இந்த விசயத்தில் அமெரிக்காவின் பயங்கரவாத சதி உலகிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.