சீனாவுக்கு அவதூறு கூறி வரும் அமெரிக்கா
2021-08-06 19:53:23

புதிய ரக கரோனா வைரஸ் உருவான இடம் பற்றி அமெரிக்க உளவுத் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் மே திங்களில் உத்தரவிட்டார். அரை மாதத்திற்கு பிறகு என்ற ஆய்வறிக்கை வெளியிடவுள்ளது. இதில், சீனா மீது அமெரிக்க செய்தி ஊடகங்களும், அரசியலாளர்களும், உளவுத் துறையினர் கூட்டாக அவதூறு கூறினர்.

செய்தி ஊடகங்களையும் அரசியலாளர்களையும் உளவுத் துறையை இணைத்து, சீனாவின் மீது அவதூறு கூறிய அமெரிக்கா, கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் எந்த அனுபவங்களையும் கற்றுகொள்ளவில்லை.

இப்போது வைரஸ் திரிபால் கரோனா வைரஸ் உலகளவில் மீண்டும் பெருமளவில் பரவி வருகின்றது. உலகில் 20 கோடிக்கு மேலானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது மிக முக்கியமான பணியாகும். இவ்வாண்டில், சீனா, உலகிற்கு 200 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை வினியோகிக்க பாடுப்படும் என்று நேற்று சீனா அறிவித்தது. உலகம் கரோனா வைரஸை எதிர்க்கும் பணிக்கு சீனா ஆற்றிய பங்கு இதுவாகும்.