ஹாங்காங்கைச் சீர்குலைத்த பேர்களுக்கு ஆதரவு அளித்த அமெரிக்கா
2021-08-06 15:55:05

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உள்ளூர் நேரப்படி ஆகஸ்டு 5ஆம் நாள் தனது சமூக ஊடகத்தில் கூறுகையில், ஹாங்காங்கிற்குத் திரும்ப பயப்படுபவர்களுக்கு புகலிடத்தை வழங்கும் என்றார்.

ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த ஓராண்டில், செழுமையான வளர்ச்சிப் பாதைக்கு ஹாங்காங் திரும்பியுள்ளது. ஆனால், ஹாங்காங்குடன் தொடர்புடைய வணிக எச்சரிக்கையை வெளியிடுவது, சீன அதிகாரிகள் பலரின் மீது தடை நடவடிக்கையை மேற்கொள்வது, ஹாங்காங் மக்களை அமெரிக்காவிலிருந்து ஹாங்காங்கிற்குத் திருப்பி அனுப்புதலை ஒத்திவைப்பது உள்ளிட்ட செயல்களின் மூலம், அமெரிக்கத் தரப்பு ஹாங்காங்கைச் சீர்குலைத்த பேர்களுக்கு ஆதரவு அளித்து, சீனாவின் வளர்ச்சியைப் பாதிக்க முயன்று வருகிறது.

யார் ஹாங்காங்கிற்குத் திரும்ப பயப்படுகின்றனர்?கண்டிப்பாக குற்றங்களுடன் தொடர்புடையவர்கள். உண்மையிலே, ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிலைப்புத் தன்மையைச் சீர்குலைக்கும் பேருக்கு ஆதரவு அளிப்பது, அமெரிக்காவின் நோக்கமாகும்.

ஹாங்காங்கின் பொது நிலைமை நிதானமானது. ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங் மற்றும் ஹாங்காங் மக்களின் நலன்களைப் பேணிக்காத்துள்ளது. அத்துடன், ஹாங்காங் குடிமக்கள் மற்றும் அங்குள்ள வெளிநாட்டவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் சுதந்திரத்தையும் இது மேலும் செவ்வனே உத்தரவாதம் செய்துள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. அமெரிக்க அரசியல்வாதிகள் உள் நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.