மேலும் ஒற்றுமையான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
2021-08-10 10:27:49

32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 8ஆம் நாள்  நிறைவடைந்தது. முன்பு கண்டிராத அறை கூவலுக்கு மத்தியில் நடைபெற்ற  ஒலிம்பிக் இதுவாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாஹ் தெரிவித்தார்.

ஒலிம்பிக் எழுச்சியைப் பார்த்தால், இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் முன், மேலும் வேகம் மேலும் உயர்வு மேலும் வலிமை என்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் பொன் மொழியில் மேலும் ஒற்றுமை என்ற வார்த்தையைச் சேர்த்தது. இந்நடவடிக்கை, ஒலிம்பிக் எழுச்சிக்கு புதிய பரிணாமத்தை கொடுத்துள்ளது.

உண்மையில், விளையாட்டுப் போட்டியில் வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமை, மனித குலம் தற்போதைய அறை கூவல்களைச் சமாளிப்பதற்கு மிக முக்கியமானது. புதிய ரக கரோனா வைரஸை எதிர்ப்பதற்கும், உலக பொருளாதார மீட்சியை முன்னேற்றுவதற்கும், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கும், உலகின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தேவை.

விளையாட்டுப் போட்டிகளிலோ, சமூக வளர்ச்சியிலோ, இன்னல்களைச் சமாளித்து, எதிர்காலத்தை பெற விரும்பினால், உலகம் பிரிக்கப்பட முடியாத பொது சமூகமாகும் என்பதை சரியாக நினைவில் கொள்ள வேண்டும். ஒற்றுமை வலுவாக இருந்தால், மேலும் உயர்வு வேகம் வலிமை என்பதை நனவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.