அமெரிக்காவில் மனித நேய பேரிடருக்கு காரணம் அதிகாரப் போட்டி
2021-08-10 20:55:51

இதுவரை அமெரிக்காவில் 3.5 கோடிக்கும் மேலானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு எண்ணிக்கை 6.1 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இவ்விரு எண்ணிக்கையும் உலகளவில் மிக அதிக அளவாக இருக்கிறது. இது, ஒரு படுகொலை என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் பொறுப்பாளர் விலியேம் ஃபோக் தெரிவித்தார்.

நியூக்ளிக் அமில பரிசோதனை, கட்டாய முகக் கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி செலுத்துதல் முதலிய நோய் தடுப்புடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையிலும், அமெரிக்காவின் இரு கட்சிகளும் சொந்த நலன் கருதியே செயல்பட்டு வருகின்றன.

கொலம்பிய பல்கலைக்கழகத்தின் நோயியல் ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, 2020ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் நாள் வெளியிடப்பட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள், அத்தேதியை விட 2 வாரங்களுக்கு முன்பே வெளியாகி இருந்திருந்தால், அவ்வாண்டு மே 3ஆம் நாள் வரை 54ஆயிரம் அமெரிக்கர்களின் உயிரிழப்பு தவிர்க்கப்பட முடியும்.

அமெரிக்க ஜனநாயக அமைப்பு முறை, அந்நாட்டு அரசியல்வாதிகளிடையே அதிகாரப் போட்டியாக மாறியுள்ளது என்பதை நோய் பரவல் தடுப்பில் அமெரிக்க அரசின் தோல்வி தெளிவாக வெளிக்காட்டுகிறது.