அறிவியல் மற்றும் பொது அறிவுக்கு எதிர்ப்பு காட்டும் அமெரிக்க அரசியல்வாதிகள்
2021-08-11 19:16:52

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை போருக்குச் சமமாக சிலர் ஒப்பிடுகின்றனர். வைரஸ் தான் எதிரியே தவிர, அறிவியல் அல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இது, அமெரிக்க மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் பேட்ரிஸ் ஏ. ஹாரிஸால் கடந்த ஆண்டு தெரிவித்த எச்சரிக்கையாகும். ஆனால், அரசியல் சுயநலன், கட்சிகளிடையே போட்டி முதலிய காரணங்களால், தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள வாஷிங்டனில் உள்ள சில அரசியல்வாதிகள் அறிவியல் மற்றும் பொது அறிவுக்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள். இதனால், அமெரிக்கா அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது. கரோனா வைரஸால் 6 இலட்சத்து 10 ஆயிரத்துக்கு மேலான அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.

குறிப்பாக, அமெரிக்க பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டில் கரோனா வைரஸ் பரவியது. இரண்டு கட்சிகளும் தொற்றுநோயை அரசியல் கருவியாக்கி ஒருவரையொருவர் தாக்கி வாக்குகள் பெற மட்டும் முயற்சித்தினர். இது, அமெரிக்க சமூகத்தில் பெரிய அளவில் அறிவுப்பூர்வமற்ற போக்கை ஏற்படுத்தியது.