நோய் தடுப்பில் அமெரிக்காவின் தோல்விக்கு உண்மையான காரணம் என்ன?
2021-08-12 19:15:01

4ஆவது அலை கொவிட்-19 நோய் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் நாள் ஒன்றுக்கு 1.1 இலட்சத்துக்கும் மேலானோருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 11ஆம் நாள் வரை 3.6 கோடிக்கும் மேலானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு எண்ணிக்கை 6.1 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இவ்விரு எண்ணிக்கையும் உலகளவில் மிக அதிக அளவாக இருக்கிறது. இது, சீனாவைச் சேர்ந்த மூன்று சிந்தனை கிடங்குகள் கூட்டாக வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அமெரிக்கா உலகளவில் நோய் தடுப்பில் தோல்வி பெற்ற மிகப் பெரிய நாடாகும் என்று குறிப்பிடுவதைக் காட்டுகிறது.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கி, நோய் நிலைமை, அமெரிக்க இரு கட்சிகளின் அதிகாரப் போட்டியின் கருவியாக மாறியது. உள்நாட்டில் நோயைக் கட்டுப்படுத்த முடியாத அமெரிக்க அரசு, சர்வதேச நோய் தடுப்பின் ஒத்துழைப்பைச் சீர்குலைத்து வருகிறது. இது அமெரிக்காவின் இகழ்ச்சியாகவும், அமெரிக்கர்களின் துரதிர்ஷ்டமாகவும் அமைந்துள்ளது.